தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே திமுக தலைமை தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னரும் அது குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தான் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜூலை மாதம் முதல் நியாய விலை கடைகள் மூலமாக உரிமை தொகையை வழங்கலாமா? அல்லது நேரடியாக வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடலாமா? போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக முக்கிய முடிவு மேற்கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்பு மற்றும் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது