கடந்த சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக தன்னுடைய அறிக்கையில் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது அந்த வாக்குறுதியை திமுக ஆட்சிக்கு வந்து சற்றேற குறைய 2️ ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையிலும் நிறைவேற்றவில்லை என்று பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தனர்.
ஆகவே அந்த வாக்குறுதி நிறைவேற்றும் பொருட்டு திமுக அதிரடியாக செயல்பட தொடங்கியது. ஆகவே சமீப காலமாகவே மிக விரைவில் மகள் இருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று பல்வேறு அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் தமிழகத்தில் இல்லத்தரசிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதில் யாரெல்லாம் அந்த பணத்தை வாங்க தகுதியானவர்கள்? என்பது தொடர்பாக முன்னதாகவே அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டிருக்கிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை ஜூலை மாதம் 20ம் தேதி முதல் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இந்த முகாம் நடைபெறும் இடம் தொடர்பாக நியாய விலை கடைகளில் தமிழில் தகவல் பலகை அமைக்கவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் விண்ணப்பங்களை நியாய விலை கடை பணியாளர்கள் விநியோகம் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பயனாளிகள் கைவிரல் வேலை அவசியமாக வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.