fbpx

அசத்தல்..! கிராம சபைக் கூட்டத்தில் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை திட்டம்…! தமிழக அரசு அதிரடி உத்தரவு…

காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ஆம் நாளில் நடைபெற உள்ள கிராமசபைக் கூட்டங்களில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து கிராம ஊராட்சிகளும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்திடும் வகையில் கிராமசபைக் கூட்ட அழைப்பிதழ் ஒன்று வடிவமைக்கப்பட்டு ஊரக வாழ் பொதுமக்களுக்கு இல்லம் தோறும் வழங்கப்பட்டுள்ளது. அரசு செயல்படுத்தும் அனைத்து முன்மாதிரி திட்டங்கள் மூலம் பயன் பெற்றோர் விவரம், கிராம ஊராட்சியின் வரவு செலவு கணக்கு விவரங்கள். ஊராட்சியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் / பணிகள் மற்றும் அதனால் பயன்பெறும் பயனாளிகள் ஆகியன அடங்கிய கையடக்க விழிப்புணர்வு பிரதிகள் மூலம் அனைத்து வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட உள்ளது.

அரசு மூலம் செயல்படுத்தப்படும் அரசின் முத்தான திட்டங்களான விடியல் பயணம்- மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக திட்டசெயலாக்கம், பயனாளிகள் தேர்வு விவரம், திட்டத்தின் பயன்கள் குறித்து குறும்படங்கள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காட்சிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிராமசபை கூட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி குறும்பட உரையின் மூலம் 2.10.2023 அன்று துவக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்திட உள்ளார்கள். மேலும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தொடர்புடைய மாவட்டங்களில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கிராமசபைக் கூட்டத்திற்கான உத்தேச பொருட்கள் அடங்கிய வழிகாட்டுதல்கள் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக கிராம ஊராட்சிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், பொதுவான விவாதப் பொருட்களாக. ஊராட்சிகளின் நிதி நிலை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு, மழைநீர் சேரிப்பு. வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, பிரதமமந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம் மற்றும் இதர பொருட்களுடன் விவாதம் நடைபெற உள்ளது.

Vignesh

Next Post

நிலநடுக்கத்தை 5 நாட்களுக்கு முன்பே கணிக்கும் பாம்புகள்!… எப்படி தெரியுமா?

Sun Oct 1 , 2023
உலகின் பல இடங்களில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவது வழக்கம். அப்படி ஏற்படக்கூடிய இந்த பூகம்பத்தை பாம்புகள் கூட கணிக்க உதவுகின்றன. அதாவது 75 மைல் தொலைவில் (121 கிலோமீட்டர்) இருந்து வரும் பூகம்பத்தை ஐந்து நாட்களுக்கு முன்பே பாம்புகள் உணர முடியுமாம். இது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பூகம்பங்களுக்கு முன்னர் விலங்குகள் பல்வேறு அறிகுறிகளை உணர்வதாக பல்லாயிரம் ஆண்டுகளாக தகவல்கள் பரவுகின்றன. அதாவது பூகம்பத்திற்கு சில மணி […]

You May Like