வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்பிரகாரத்தில் விநாயகர் நாக யக்ஞோயப கணபதியாக வீற்றிருக்கிறார். அம்மன் தபசுகிருதாம்பாள் அவதாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் இக்கோயில் உள்பிரகாரத்தில் சப்தமாதர்களின் கற்சிலைகள் பல்லவர் கால கலைவண்ணத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும்.
மேலும் இக்கோயிலில் மூலவர் சோமநாதீஸ்வரராக மரகத லிங்கத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். இக்கோயில் மூலவர் கோபுரம் மீது பச்சை நிற மரகதக் கல்லால் ஆன கலசம் வடிவமைத்துள்ளது பெரும் சிறப்பு. மேலும் நவக்கிரக சிலைகள், நந்தி சிலை மற்றும் பெரிய கொடிமரத்துடன் மிகப் பிரமாண்டமாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் இருந்து 200அடி தொலைவில் தென் பக்கத்தில் ராஜராஜ சோழனின் பாட்டன் ஆரூர் துஞ்சிய தேவ சோழனின் கல்லறை கட்டப்பட்டுள்ளது. கிபி 1014ஆம் ஆண்டு ராஜராஜ சோழனின் தாய் வழி பாட்டனரான துஞ்சிய தேவன் போரில் மரணமடைந்தார். அவரின் நினைவாக சோமநாதீஸ்வரர் கோயிலில் எதிர்பக்கத்தில் அரிஞ்சிகை ஈஸ்வரன் கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
மேலும் அருஞ்செழிய சோழன் நினைவிடம் அமைந்துள்ள பிரகாரத்தில் அருந்திரீஸ்வரர் கோயில் கட்டப்பட்டு காட்சி அளிக்கின்றது. இங்கே சித்திரை மற்றும் புரட்டாசி மாதங்களில் சூரிய பகவான் சிவலிங்கம் மேனி மீது விழும் படியாக கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிசய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மற்றும் புரட்டாசி மாதத்தில் நடைபெறுகின்றது. இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே பக்தர்கள் இக்கோயிலில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
Read more : கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை வருதா..? கவலையை விடுங்க.. இந்த பரிகாரம் செய்தால் மட்டும் போதும்!