fbpx

அக்னி நட்சத்திரம் நிறைவடைவதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை!

அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, அண்ணாமலையார் கோயிலில் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவடைகிறது. இதனையடுத்தது இறைவனின் திருமேனியை குளிர்விக்கும் விதமாக அக்னி நட்சத்திர பரிகார நிவர்த்தியாக திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த 4ம் தேதி முதல் தாராபிஷேகம் நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவடைவதையொட்டி, நேற்று இரவு 7 மணியளவில் முதல் காலம் 1,008 கலச பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இன்று காலை 8.30 மணிக்கு 2வது கால கலச பூஜையும், மாலை 6.30 மணிக்கு 3வது கால கலச பூஜையும், நாளை காலை 7 மணிக்கு 4வது கால கலச பூஜையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், பகல் 11 மணிக்கு அண்ணாமலையாருக்கு 1008 கலசாபிஷேகம் நடைபெறும். அக்னி நட்சத்திரத்தின் நிறைவாக, நாளை இரவு 8 மணிக்கு சுவாமி வீதியுலா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Baskar

Next Post

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை!! வடகொரியாவில் நடந்த பகீர் சம்பவம்!!

Sun May 28 , 2023
வட கொரியாவில் கிம் ஜாங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மிக கடுமையான கட்டுப்பாடுகளுடன் கம்யூனிஸ்ட் ஆட்சி நடத்தி வரும் அதிபர் கிம் அடிக்கடி பல பகீர் உத்தரவுகளை போட்டு, உலகையே அதிர்ச்சி அடைய செய்வார். இந்நிலையில், சர்வதேச அளவில் நிலவும் மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வடகொரியாவில் கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை பின்பற்ற தடை உள்ள நிலையில், சுமார் 70,000 […]

You May Like