fbpx

இவர்களுக்கும் 10 மற்றும்‌ 12-ம்‌ வகுப்புக்கு இணையான சர்டிபிகேட்…! கால அவகாசம் குறைவு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இது தொடர்பாக தருமபுரி அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஐடிஐ படிப்பவர்களுக்கு 10 மற்றும்‌ 12-ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழ்‌ தரப்படும்‌ என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.

அதன்படி 8-ம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐ-களில்‌ சேர்ந்து படிப்பினை முடிப்பவர்களுக்கு 10ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌, 10ஆம்‌ வகுப்புக்கு பிறகு ஐடிஐககளில்‌ சேர்ந்து படிப்பை முடிப்பவர்களுக்கு 12ஆம்‌ வகுப்புக்கு இணையான சான்றிதழும்‌ பள்ளிக்கல்வித்துறை மூலம்‌ அளிக்கப்படும்‌. அதேநேரம்‌, ஐடிஐ முடித்தவர்கள்‌ மொழிப்பாடங்களில்‌ தேர்ச்சி அடைய வேண்டும்‌.

அதன்படி, 10, 12-ஆம்‌ வகுப்புக்கான பொதுத்‌ தேர்வு மார்ச்‌ – 2023 ல்‌ நடக்க உள்ளது. எனவே, 8, 10-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்று பின்னர்‌ ஐடிஐ படித்தவர்கள்‌ தமிழ்‌, ஆங்கிலம்‌ பாடத்தேர்வில்‌ பங்கேற்க தனித்தேர்வர்களாக நாளை வரை அரசு சேவை மையங்களில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌ என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கூடுதல்‌ விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ மாணவர்கள்‌ அறிந்துகொள்ளலாம்‌ என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளதாக தருமபுரி அரசினர்‌ தொழிற்‌ பயிற்சி நிலைய அதிகாரி கே.சிவகுமார்‌ தெரிவித்துள்ளார்‌.

Vignesh

Next Post

பண்டைய காலத்தில் உணவுகளை ஃப்ரெஷ்ஷாக வைத்திருக்க பயன்படுத்தப்பட்ட யுக்திகள் தெரியுமா..! 

Mon Jan 2 , 2023
உணவை புதியதாக வைத்திருப்பது ஒரு பிரச்சனை. இருப்பினும், பண்டைய ஆயுர்வேத நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் உணவை சிறப்பாகப் பாதுகாக்க முடியும். இந்த நுட்பங்கள் உணவை நீண்ட நேரம் பாதுகாக்க உதவுகின்றன.  அவை உணவை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகின்றன. குளிர்சாதன பெட்டி போன்ற நவீன உணவு சேமிப்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, ஆயுர்வேத முனிவர்கள் உணவை எவ்வாறு புதியதாக வைத்திருப்பது என்பதைக் கண்டுபிடித்தனர். நெய், சாஸ்கள், தண்ணீர் மற்றும் […]

You May Like