fbpx

10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.63,000 சம்பளத்தில் வேலை..!! இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க..!!

இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

பதவி: இளநிலை உதவியாளர் (ம) தட்டச்சர் Junior Assistant-cum-Typist (JAT

சம்பள நிலை: ரூ. 19,900 – ரூ.63,200 (நிலை – 2)

காலியிடங்கள்: 200 (தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு)

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10, 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். நிமிடத்திற்கு 40 ஆங்கில வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் அல்லது நிமிடத்திற்கு 35 இந்தி வார்த்தைகள் என்ற சீரான வேகத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.600. நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 20.04.2023 அன்று 18-27க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தட்டச்சு திறன் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

விண்ணப்பம்: இதற்கான விண்ணப்பங்கள் எதிர் வரும் ஏப்ரல் 20ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை பெறப்படும்.

இதுகுறித்து கூடுதல் தகவல் தேவைப்படுவோர் அறிக்கையை பதிவிறக்கம் செய்து வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அவ்வப்போதைய நிலவரங்களை தெரிந்து கொள்ள https://recruitment.nta.nic.in/. என்ற இணைப்பைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Chella

Next Post

அரசுப் போக்குவரத்து பணியாளர்களுக்கு ஓய்வூதியம்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் உத்தரவு..!!

Fri Mar 31 , 2023
அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் மக்களுக்கான அத்தியாவசியப் பேருந்து சேவைகளை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருவதோடு, அனைத்து கிராமப் பகுதிகளுக்கும் பேருந்து பயண வசதியை ஏற்படுத்தி தடையற்ற போக்குவரத்து சேவையை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. அத்துடன் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர், அரசு கல்லூரிகள் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணச் சலுகை […]

You May Like