fbpx

நாளை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு…! இணையதளங்கள் அறிவிப்பு!!

ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஏப்ரல் 2024-ல் நடைபெற்ற 2023-24 ஆம் கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) நாளை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

மேலும் தேர்வர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.மேலும்,பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: West Nile | கேரளாவில் மர்ம காய்ச்சலுக்கு ஒருவர் பலி.!! சுகாதாரத்துறை எச்சரிக்கை.!!

Rupa

Next Post

16-வது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான கருத்துக்கள் வரவேற்பு...!

Thu May 9 , 2024
பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். பதினாறாவது நிதி ஆணையம் விதிமுறைகள், பின்பற்றக்கூடிய பொதுவான அணுகுமுறை குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் / கருத்துக்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதினாறாவது நிதிக்குழுவின் பணி தொடர்பான வேறு எந்த விவகாரம் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம். தங்களது ஆலோசனைகளை 16-வது நிதிக்குழுவின் https://fincomindia.nic.in/portal/feedback இணையதளம் மூலம் ‘ஆலோசனைகளுக்கான அழைப்பு’ என்ற பிரிவின் கீழ் […]

You May Like