fbpx

தொடர் பாலியல் பலாத்காரம் கர்ப்பமான பத்தாம் வகுப்பு மாணவி! 21 வயது இளைஞன்  கைது!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆகிய 21 வயது இளைஞரை காவல்துறை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ்  வழக்கு பதிவு செய்திருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அரசூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சபாபதி இவரது மகன் சஞ்சய் (21).  இவர் அதே பகுதியை சார்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழகி வந்தார். இந்தப் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தனது வீட்டில்  ஆளில்லாத நேரத்தை பயன்படுத்தி ஆசை வார்த்தைகளை கூறி அந்த மாணவியை தனது வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். மேலும் அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அந்த மாணவியும் இவரது வீட்டிற்கு சென்றிருக்கிறார். அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாகவும் தனது ஆசைக்கு இணங்கும் படியும் வற்புறுத்தி இருக்கிறார் சஞ்சய். மேலும் மாணவியை கட்டாயப்படுத்தி அவரிடம் தகாத உறவில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதையே தொடர்ந்து தனது வீட்டில் ஆள் இல்லாத நேரங்களில் எல்லாம் அந்த மாணவியை தனது வீட்டிற்கு வர கட்டாயப்படுத்தி அவரைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் அந்த மாணவிக்கு திடீரென  உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனை அடுத்து அவரது பெற்றோர்  மருத்துவ சிகிச்சைக்காக  ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர். மாணவியை சோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக  இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதனைப் பற்றி அவரது பெற்றோரிடம்  தெரிவித்திருக்கிறார் மருத்துவர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார்  தனது மகளிடம் விசாரித்து இருக்கிறார்.

நடந்த சம்பவங்களை தனது தாயாரிடம் கூறியிருக்கிறார் அந்த மாணவி. மேலும் அந்த இளைஞர்  தொடர்ந்து தன்னை வற்புறுத்தி  பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தி வந்ததாக தனது தாயாரிடம் தெரிவித்திருக்கிறார் மாணவி. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் உடனடியாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சஞ்சய்க்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட மயிலாடுதுறை அனைத்து மகளிர்  காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி மற்றும் காவல்துறையினர் உடனடியாக மயிலாடுதுறை அரசு  மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த  மாணவியிடம்  விசாரணை மேற்கொண்டனர் . மாணவி அளித்த தகவல்களின் அடிப்படையில்  சபாபதி என்பவரின் மகன் சஞ்சயை  கைது செய்து  அவர் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். மயிலாடுதுறையில்  பத்தாம் வகுப்பு மாணவியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து  கர்ப்பம் ஆகிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும்  ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Baskar

Next Post

சினிமா ஸ்டைலில் தங்கம் கடத்த முயன்ற இளைஞர்! சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

Tue Feb 7 , 2023
சென்னை விமான நிலையத்தில் தங்கத்தை முயன்ற இளைஞரை  விமான நிலைய போலீசார்  கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்து  ரூபாய் 56.94 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வருகின்ற விமானத்தில் தங்கத்தை கடத்தி வருவதாக சுங்க  துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலை எடுத்து  விமான நிலையத்தில் சோதனையை பலப்படுத்தினர் அதிகாரிகள். இதனைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் தீவிரமான சோதனைக்கு பின்னரே விமான […]

You May Like