தமிழகத்தில் மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில், தற்போது வகுப்புகள் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில், 10ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே அறிவியல் பாடம் தொடர்பாக ஒரு பயம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பத்தாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2019-20 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.
அறிவியல் பாடத்தின் புதிய வினாத்தாள் வடிவமைப்பு மாணவர்களை பெரிதும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பொதுவாக எல்லா பாடங்களிலும் குறைந்தபட்ச மதிப்பெண்களாக 35 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி என்ற சூழ்நிலையில், அறிவியல் பாடத்தில் மட்டும் இது வேறு விதமாக உள்ளது.
அதாவது அறிவியல் பாடத்தில் 35 மதிப்பெண் பெற்றாலும் கூட தேதியில் 20 மதிப்பெண் பெறாவிட்டால் அந்த பாடத்தில் தோல்வியடைய கூடிய சூழ்நிலை காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் அறிவியல் தேர்வு என்றாலே பயத்தோடு தான் எதிர்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாகத்தான் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இந்த வினாத்தாள் வடிவமைப்பை பழைய முறையில் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இத்தகைய நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் வைத்து தேரியில் 20 மதிப்பெண்கள் எடுத்தால் தான் தேர்ச்சி என்ற முறையை நீக்குவது தொடர்பாகவும், 7 மதிப்பெண்கள் வினாக்களை 5 மதிப்பெண்கள் வினாவாக மாற்றுவதுடன், 2 மதிப்பெண்கள் வினாக்களை அதிகரிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. அதோடு இந்த விவகாரத்தில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி வரும் என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.