சென்னை விமான நிலையத்தில் காலியாகவுள்ள 422 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் காலியாக உள்ள ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 422 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வி தகுதி: Utility Agent – Ramp Driver – பணியிடத்திற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுபோக கனரக வாகனங்களை இயக்குவதற்கான லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
Handyman/ Handywoman – பணியிடத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. ஆங்கிலத்தை வாசிக்கவும் புரிந்து கொள்ளும் திறன் இருக்க வேண்டும். உள்ளூர் மொழி மற்றும் இந்தி மொழியை புரிந்து கொள்ளும் திறன் இருப்பவர்களுக்கு முன்னுரிமை.
வயது வரம்பு: 28 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: Utility Agent – Ramp Driver – பணிக்கு மாதம் ரூ.24,960 சம்பளம் வழங்கப்படும். உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.22,530 வழங்கப்படும். 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு முறை: ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.aiasl.in/ என்ற விமானநிலைய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ரூ.500-க்கான டிடியுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
Office of the HRD Department,
AI Unity Complex,
Pallavaram Cantonment,
Chennai -600043
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி:
Utility Agent Cum Ramp Driver : 02.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை)
Handyman: 04.05.2024 (காலை 9 மணி முதல் 12 மணி வரை).
தேர்வு அறிவிப்பினை படிக்க…
https://www.aiasl.in/resources/Recruitment%20Advertisement%20for%20Chennai%20%20Station.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH
Read More : உஷார்..!! காலாவதியான சாக்லேட்..!! ரத்த வாந்தி எடுத்து ஒன்றரை வயது குழந்தை பலி..!! அச்சத்தில் மக்கள்..!!