fbpx

தமிழ்நாட்டில் கடந்த 5 நாட்களில் 11 பேர் பலி..!! கனமழையால் நிகழ்ந்த சோகம்..!! மக்களே உஷார்..!!

Rain | தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்படியாக நாமக்கல்லில் அதிக மழை பதிவாகியுள்ளது. கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு-மாடுகள் இறந்துள்ளன. 24 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

24ஆம் தேதி வரை தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதனால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களில் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Read More : Goat படத்தில் சிவகார்த்திகேயன்..!! 2026 தேர்தலுக்கு இப்போதே பிளான் போட்ட விஜய்..!! இது இத்துப்போன கதை..!!

Chella

Next Post

தொடர் மழையால் திடீரென உயர்ந்த காய்கறிகளின் விலை..!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! பூண்டு விலை டாப்..!!

Tue May 21 , 2024
Rain | தமிழ்நாட்டில் கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்த நிலையில், தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், இதுவரை கனமழைக்கு கடந்த 5 நாட்களில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இடி மின்னலின்போது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்தும் குறைந்து விலை அதிகரித்துள்ளது. அதாவது, ஒரே கிலோ பூண்டு […]

You May Like