fbpx

விஜய்க்கு அடுத்தடுத்த சிக்கல்.. தவெக மாநாட்டுக்கு சென்ற வேன் கவிழ்ந்து விபத்து..!! 11 பேரின் நிலை என்ன?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெறவுள்ளது. இன்று பிற்பகல் 3.15 முதல் 4 மணிக்குள் விஜய் மாநாட்டு அரங்கத்திற்கு வருகை தர உள்ளார். இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் கொள்கைகளை அறிவிக்க உள்ளதால் பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த மாநாட்டிற்கு தமிழக முழுவதும் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செல்கின்றனர். இந்நிலையில் தாம்பரம் அருகே நன்மங்கலம் பகுதியில் இருந்து டெம்போ ட்ராவல் 11 பேர் மாநாட்டுக்கு நள்ளிரவு 11.50 மணிக்கு புறப்பட்டனர். வாகனத்தை நன்மங்கலம் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் இயக்கியுள்ளார். தாம்பரம் – வேளச்சேரி சாலை சந்தோசபுரத்தில் வந்த போது முன்னே சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

அருகில் இருந்தவர்கள் உடனடியாக வேனில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் கவிழ்ந்த வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்து சீரமைத்தனர்.

முன்னதாக, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மெட்ரோ ரயில் நிலையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இந்த விபத்தில் மாநாட்டிற்கு சென்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

Read more ; உண்மையில் மறுபிறவி என்ற ஒன்று இருக்கா? கருட புராணம் என்ன சொல்கிறது..  

English Summary

11 people were injured when a van carrying TVK conference overturned near Tambaram.

Next Post

விஜய் மாநாட்டில் இதை கவனிச்சீங்களா..? பாஜகவின் ’பி’ டீம் தான் தவெக..!! இதுதான் ஆதாரம்..!!

Sun Oct 27 , 2024
From the day Vijay announced his entry into politics, he was criticized as BJP's B team.

You May Like