fbpx

குட் நியூஸ்…! 11,12 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண்…!

11 மற்றும் 12 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்படும்.

பொதுத் தேர்வு எழுதும் 11, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் தருவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்க்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப் பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள், கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Tasmac: 90 மி.லி மது அறிமுகம் செய்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்...! அன்புமணி எச்சரிக்கை...

Sun Nov 26 , 2023
காகிதக் குடுவைகளில் 90 மி.லி மதுஅறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும்போராட்டத்தை பா.ம.க முன்னெடுக்கும் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் மதுவகைகள் கண்ணாடி புட்டிகளில் அடைத்து விற்கப்படுவதற்கு மாற்றாக காகிதக் குடுவைகளில் (Tetra Pack) அடைத்து விற்கப்படவுள்ளதாகவும், அது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்திருக்கிறார். மது அருந்துபவர்கள் காலியான மதுப்புட்டிகளை கண்ட […]

You May Like