fbpx

11,12ம் வகுப்பு மாணவர்களே இதற்கு நீங்கள் தயாரா…..? காத்திருக்கும் அரிய வாய்ப்பு ரெடியா இருங்க…..!

பள்ளி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் அதிகரிக்கும் நோக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக மாவட்ட வாரியாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த விதத்தில் இந்த வருடத்திற்கான போட்டி வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கின்ற பள்ளிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் காலை 10 மணி அளவில் இந்த போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்றுக் கொள்ள விருப்பம் உள்ள மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி தலைமை ஆசிரியரின் பரிந்துரையின் படி போட்டி தொடங்கும் முன்னதாக தமிழ் வளர்ச்சி துறை இயக்குனரிடம் வழங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு போட்டிக்கு ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டுமே பங்கேற்றுக் கொள்ளலாம்.

போட்டிக்காண தலைப்புகள் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அறிவிக்கப்படும். இந்த போட்டியில் முதல் பரிசு 10000 ரூபாய் 2வது பரிசு 7000 ரூபாய், 3வது பரிசு, 5000 ரூபாய் இந்த பரிசுகள் அனைத்தும் காசோலையாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Sun Jun 25 , 2023
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடற்கரை பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒடிசா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  […]

You May Like