இந்த கல்வியாண்டு நடைபெற்ற 11-ம் வகுப்பு துணைத் தேர்வர்கள் தங்கள் விடைத்தாள் நகலினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று பிற்பகல் முதல் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.விடைத்தாள்கள் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டலுக்கு விண்ணபிக்க விரும்பினால், இதே இணையதளத்திலிருந்து அதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
துணைத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் காலை 11 மணி முதல் மாலை 5.00 மணி வரை நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.