fbpx

நாகை மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு!. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!.

Fishermen: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகியுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். இந்நிலையில், நாகை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க ஏராளமான படகுகளில் மீனவர்கள் சென்றுள்ளனர். அப்போது, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழக மீனவர்கள் சென்ற ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

உடனடியாக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மீனவர்கள் பிரச்சினை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும் கடந்த சில வாரங்களில் மீனவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவ குடும்பங்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: குட்நியூஸ்!. தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் இல்லை!. நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவிப்பு!

English Summary

12 Tamil Nadu fishermen captured! Serial atrocities of the Sri Lankan Navy!

Kokila

Next Post

மூத்த குடிமக்களுக்கு சூப்பர் திட்டம்..!! மாதந்தோறும் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் சம்பாதிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Sun Oct 27 , 2024
The Senior Citizen Savings Scheme launched by the Post Office provides a monthly income of Rs 20,500 to the elderly during their retirement.

You May Like