fbpx

மூளையை உண்ணும் அமீபாவால் சிறுவன் உயிரிழப்பு.!! பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு – கேரளாவில் சோகம்!

கேரளாவில் மூளை உண்ணும் அமீபாவால் கடந்த இரண்டு மாதங்களில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியது.

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் என்ற அரிதான நோயானது தற்போது கேரளாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது, மத்திய நரம்பு மண்டலத்தில் ஆபத்தான நோய்த்தொற்று ஆகும், இது Naegleria fowleri வகை அமீபாவால் ஏற்படுகிறது.

ஏழு ஆண்டுகளாக ஆறு பேரை மட்டுமே பாதித்த இந்நோய், தற்போது மாநிலத்தில் தீவிர பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கேரள மாநிலம் இருமூளிபரம்பு பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத் மற்றும் ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல், கோழிக்கோட்டில் உள்ள ஃபரூக் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் வாந்தி மற்றும் தலைவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ் இருப்பதை உடனடியாகக் கண்டறிந்தனர்.

நோய்வாய்ப்படுவதற்கு முன்பு, அவர் குளத்தில் குளித்ததாகக் கூறப்படுகிறது, அதைத் தொடர்ந்து அதிகாரிகள் குளத்தை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில், அந்த சிறுவன் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, மலப்புரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி மே 21 அன்று இறந்தார், அதைத் தொடர்ந்து ஜூன் 16 அன்று கண்ணூரில் 13 வயது சிறுமி இறந்தார்.

மக்கள் அசுத்தமான நீர் அல்லது புதிய நீரில் நீந்தும்போது அமீபாக்கள் மூக்கு வழியாக மூளைக்குள் நுழையலாம். 5 வயது சிறுமி மலப்புரத்தில் உள்ள கடலுண்டி ஆற்றிலும், மற்ற இரண்டு குழந்தைகளும் வெவ்வேறு ஆறுகளிலும் குளித்த பிறகு இந்த நோய்த்தொற்று ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸின் உயிர்வாழ்வு விகிதம் மூன்று சதவீதம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

A 12-year-old boy in Kozhikode district has succumbed to amoebic meningoencephalitis, a rare and often fatal brain infection caused by a free-living amoeba found in contaminated water, on Wednesday.

Next Post

'மார்பக புற்றுநோயால் போராடும் நடிகை' முடியை இழந்த போதும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்திய ஹினா கான்!!

Thu Jul 4 , 2024
Actor Hina Khan is battling cancer. She shared the news with her fans just a few days back and she has been taking everyone along in her journey to battle the disease.

You May Like