fbpx

“வெளிய சொல்லாத”! வேனிற்குள் கொடூரம்.! பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட 12 வயது சிறுமி.! டிரைவர், பிரின்சிபால் கைது.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி வேன் டிரைவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வேன் டிரைவர் பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் நகரை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்திருக்கிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த சிறுமியை வேனில் அழைத்துச் சென்ற டிரைவர் ஆளில்லாத இடத்திற்கு கூட்டிச்சென்று சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து மற்ற சிறுமிகளையும் வீட்டிலிருந்து அழைத்து பள்ளியில் விட்டுச் சென்றிருக்கிறார் .

இந்த சம்பவத்தை சிறுமி பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் முதல்வரிடம் கூறிய போது அவர்கள் வெளியே சொல்ல வேண்டாம் என சிறுமியை மிரட்டி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

சிறுமியின் பெற்றோர் புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் ரமேஷ் என்ற வேன் டிரைவரை கைது செய்ததோடு இந்தக் கொடூர சம்பவத்தை மறைக்கும் என்ற பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்து இருக்கின்றனர்.

Next Post

Wow..!! இனி ட்விட்டரில் பணம் அனுப்பலாம்..!! எலான் மஸ்க் வெளியிட்ட மாஸ் அறிவிப்பு..!!

Mon Dec 25 , 2023
எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே அடிக்கடி அதிரடியான பல மாற்றங்களை செய்து வருகிறார். சமீபத்தில் ஒரு நாளைக்கு பயனர்கள் குறிப்பிட்ட பதிவுகள் மட்டும் தான் பார்க்க முடியும் என ஒரு மாற்றத்தை கொண்டு வந்தார். மேலும், புளூ டிக் பயன்படுத்துவோருக்கு கட்டணம், விளம்பரம் செய்து பொருளீட்டுதல் போன்ற மாற்றத்தை ஏற்படுத்தினார். தொடர்ந்து ட்விட்டர் என்ற பெயரை எக்ஸ் (X) என மாற்றினார். அதன் லோகோவையும் மாற்றினார். இந்நிலையில், […]

You May Like