fbpx

122 டிகிரியில் கொளுத்தும் வெயில்!… ஜூன் மாதத்தில் 100க்கு மேற்பட்டோர் பலி!… எங்கு தெரியுமா?

ஜூன் மாதம் மெக்சிகோவில் கடுமையான வெப்பநிலை காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் மிகக் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இதன் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உள்ளிட்ட வெப்பம் சார்ந்த நோய் அறிகுறிகளுடன் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மெக்ஸிகோ நாட்டு சுகாதாரத் துறைச் செயலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் நிலவிவரும் கடும் வெயில் காரணமாக கடந்த 3 மாதங்களில் 112 போ் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்ப அலையில் சிக்கி கடந்த 2 வாரங்களில் மெக்சிகோவில் 100 பேர் வரை இறந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜூன் 12ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் 1,000க்கு மேற்பட்டோர் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 104 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக நாட்டின் சில பகுதிகளில் கொளுத்தும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான வெப்பம் காரணமாக கடந்த மாா்ச் மாதத்திலிருந்து இதுவரை 112 போ் உயிரிழந்துள்ளனா்.அதிகபட்சமாக, நியூவோ லியான் மாகாணத்தில் வெயிலுக்கு 64 போ் உயிரிழந்திருக்கின்றனர். இதுதவிர, டமாலிபஸ், வெராக்ரஸ், டபாஸ்கோ உள்ளிட்ட 7 மாகாணங்களில் அதிக வெப்பம் காரணமாக பலர் உயிரிழந்தனா். இவர்களில் பெரும்பாலானோர் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு இறந்ததாகவும், ஒருசிலர் நீரிழப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் சுகாதாரத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்ப அலை தொடா்பான உடல்நலக் குறைபாடுகளுக்காக 1,559 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த நிலை தொடரும் என்பதால், மக்கள் வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மெக்ஸிகோவில் கடந்த 10 நாள்களாக வெப்பநிலை இதுவரை இல்லாத அதிகபட்சமாக 113 டிகிரியை தொட்டு வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் மெக்ஸிகோவில் கடும் வெப்பம் உணரப்படுவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்தனர்.

Kokila

Next Post

மருத்துவப் படிப்பு...! ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073 மட்டுமே கட்டணம்...! தமிழக அரசு அதிரடி உத்தரவு...!

Sun Jul 2 , 2023
இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு இடங்களில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருபவர்கள் ஆண்டு ஒன்றுக்கு ரூ.18,073, பி.டி.எஸ். படிப்பில் சேருபவர்களுக்கு ரூ.16,073, இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் சேருவோருக்கு ரூ.1 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு வரை அரசு கல்லூரி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு ரூ.13,610, பி.டி.எஸ். […]

You May Like