fbpx

“ ஓபிஎஸ் தரம் தாழ்ந்த செயலை செய்துள்ளார்.. தொண்டர்கள் இதை ஏற்கமாட்டார்கள்..” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து ஓ. பன்னீர்செல்வம், ஆர். வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.. ஆனால், அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்குவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்ட நிலையில், இபிஎஸ்-ஐ நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார்..

தொடர்ந்து பேசிய இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ சுயநலவாதி என்றும், அவர் எதையும் விட்டுக்கொடுத்து இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.. மேலும் ஓபிஎஸ் கட்சிக்கு விஸ்வாசமாக இருக்கவில்லை எனவும், எட்டப்பனாக செயல்பட்டார் என்று தெரிவித்தார்..

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “ இன்று நடந்தது வரலாற்று சிறப்புமிக்க பொதுக்குழு.. ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.. அதிமுக தொண்டர்கள் வெட்கி தலைகுனியும் அளவுக்கு ஓபிஎஸ் தரம் தாழ்ந்த செயலை செய்துள்ளார்.. திமுகவுடன் கைக்கூலியாக இருந்து கொண்டு, ஈனத்தனமான செயலை ஓபிஎஸ் செய்துள்ளார்.. ஓபிஎஸ் செயலை தொண்டர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.. சமூக விரோதிகளுடன் இணைந்து அத்துமீறி அதிமுக அலுவலகத்தில் நுழைந்து, உருட்டுக்கட்டை கலாச்சாரத்தை ஓபிஎஸ் உருவாக்க நினைக்கிறார்… எத்தனை ஸ்டாலின் வந்தாலும், எத்தனை ஓபிஎஸ்-ஐ ஸ்டாலின் கொண்டு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது…” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து பேசிய அவர், அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறினார்.. மேலும் அதிமுக அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை ஓபிஎஸ் கொள்ளையடித்து சென்று விட்டதாகவும் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்..

Maha

Next Post

“ தலைமை பதவியை அடித்து பிடித்தால்.. அது நிலைக்காது...” சசிகலா பேச்சு...

Mon Jul 11 , 2022
அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம், சென்னை வானகரத்தில் நடைபெற்றது.. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயாளராக தேர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமை ரத்து என பல முக்கியமான தீர்மானங்கள் இந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.. இதை தொடர்ந்து அதிமுக கட்சி விதிகள், கொள்கை, கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட […]

You May Like