fbpx

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றே கடைசி நாள்…! உடனே விடைத்தாள்‌ நகல் பதிவிறக்கம் செய்ய வேண்டும்…!

அரசு தேர்வு துறை இயக்குனர்‌ சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்‌, 12-ம்‌ வகுப்பு பொதுத்‌ தேர்வு எழுதி விடைத்தாள்‌ நகல்‌ கேட்டு விண்ணப்பித்த மாணவர்கள்‌, விடைத்தாள்‌ நகலை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌. மாணவர்கள்‌ தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைபதிவு செய்து, விண்ணப்பித்த படங்களுக்குரிய விடைத்தாள்‌ நகலை பெற்றுக்‌ கொள்ளலாம்‌.

விடைத்தாள்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ அல்லது மறுமதிப்பீட்டிற்கு அரசு தேர்வு துறையின்‌ இணையதளத்தில்‌ இருந்து விண்ணப்பித்தை பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌. விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து இரண்டு நகல்கள்‌ எடுத்து இன்று மதியம்‌ முதல்‌ ஜூன்‌ 3-ம்‌ தேதி மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறு கூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தை மாவட்ட அரசு தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாக செலுத்த வேண்டும்‌.

Vignesh

Next Post

செம வாய்ப்பு...! இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு வழங்கும் ரூ.2.5 லட்சம்‌ மானியம்‌...! எப்படி விண்ணப்பிப்பது...? முழு விவரம்

Wed May 31 , 2023
கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வெளிநாட்டில்‌ வேலையிழந்து நாடு திரும்பிய புலம்பெயர்‌ தமிழர்களுக்கு வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்கும்‌ நோக்கத்துடன்‌ தமிழ்நாடு அரசு “புலம்பெயர்ந்தோர்‌ வேலைவாய்ப்பு உருவாக்கும்‌ திட்டம்‌” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ வெளிநாடுகளில்‌ சூறைந்தது 2 ஆண்டுகள்‌ பணிபுரிந்துகோவிட்‌-19 பெருந்தொற்று பரவலால்‌ வேலையிழந்து நாடு திரும்பிய தமிழர்கள்‌சுயதொழில்‌ தொடங்க மானியத்துடன்‌ இணைந்த கடனுதவி பெற்று பயன்பெறலாம்‌. அவர்கள்‌ கோவிட்‌-19 பெருந்தொற்று பரவலினால்‌ 04.01.2020 அன்று அல்லது அதற்கு […]

You May Like