மாநில ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நிறுவனம் மாவட்ட அளவில் ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு கிராம தன்னார்வத் தொண்டு மற்றும் சமூக சேவை குறித்து மூன்று மாதச் சான்றிதழ் படிப்புநடத்துவதாகத் திட்டமிட்டுள்ளது.
மேற்படி சான்றிதழ் படிப்பானது ஆறு நாட்கள் நேரடி வகுப்புகளாக தருமபுரிமாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் சிறந்த வல்லுநர்களால் நடத்தப்படும். மேலும் கிராம அளவில் செயல்படும் தன்னார்வத் கொண்டு நிறுவனங்கள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ஊராட்சி மன்ற அலுவலகங்கள், வட்டார அலுவலகங்கள், அங்கன்வாடி மையங்கள், ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளிகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் ஆகியவை பற்றி கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை (Field Assignment) சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மையத்தின் மூலம் பயிற்சி வகுப்புகளுக்கிடையே உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தால் அறிவிக்கப்பட்ட முன்மாதிரி கிராம ஊராட்சிகளுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லப்படும். இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பின் இறுதியில் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இம்மூன்று மாதச் சான்றிதழ் படிப்பில் மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி செயலர்கள்களப்பணியாளர்கள், கிராம இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் சுய உதவிக்குழுஉறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்ளலாம். மேலும் இப்படிப்பில் கலந்துகொள்ள குறைந்தபட்சம் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமெனவும், இப்பயிற்சியில் சேர் பயிற்சிக் கட்டணமாக ரூ.1000 (ரூபாய் ஆயிரம் மட்டும்) இணைய வழி வாயிலாக ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலரைத் தொடர்பு கொண்டு செலுத்தலாம் எனவும், பயிற்சிக்கான பாடப்புத்தகம், பயிற்சி உபகரணங்கள் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு, தருமபுரி ஊராட்சிகளுக்கான மாவட்ட வள மைய அலுவலர் திருநாவுக்காசு என்பவரை 9500397965-என்ற தொலைபேசிஎண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.