அசாமில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி ஒன்று, காண்போரையெல்லாம் தாக்கியதில் 13 பேர் காயம் அடைந்தனர்.
அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் தியோக் பகுதியில் சிறுத்தை புலி ஒன்று சுற்றி திரிந்து வருவதாக மாவட்ட வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 பேர் மீது சிறுத்தைப்புலி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மேலும் ஒரு வனத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு அவ்விடத்திற்கு சென்று நிலைமையை கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறுத்தைப்புலியை மயக்கமடைய செய்து பிடிக்க முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை வன துறை பணியாளர்கள் உள்பட 13 பேர் சிறுத்தைப்புலி தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக ஓடி வரும் சிறுத்தைப்புலி காம்பவுண்டு வேலியை தாவி குதித்து, சாலை வழியாக தப்பி சென்றது. அவ்வழியாக வாகனத்தில் வந்தவர்களையும் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.