‘தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று பாடினார் பாரதியார். ஆனால் கேரளாவில் ஒரு இளைஞன், பசி கொடுமையின் காரணமாக இறந்த பூனையும் இறைச்சியை பச்சையாக உண்டிருக்கிறார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவருக்கு உணவளித்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அன்று கேரளாவின் குட்டிப்புரத்தில் உள்ள பேருந்து நிலையத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர், இறந்த பூனையின் கறியை பச்சையாக உண்பதை மக்கள் […]

அசாம் மாநிலத்தில் நீண்ட நாட்களாக போராடிவரும் போராட்டக் குழுவான அசாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (ULFA) அமைப்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது. அசாம் அரசியலில் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி என்று அழைக்கப்படும் போராட்டக் குழுவான உள்ஃபா அமைப்பின் பேச்சுவார்த்தை பிரிவினைச் சார்ந்த 16 உறுப்பினர்கள் அசாம் மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை […]

அசாம் மாநிலத்தில் முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் உள்ளபோது, இரண்டாவது திருமணம் செய்ய விரும்பும் அரசு ஊழியர்கள் அனைவரும் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். இது ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான சட்டம் ஆகும். சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, அத்தகைய நபர்களுக்கு பணியிலிருந்து கட்டாய ஓய்வளிப்பதுடன், அவர்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மேலும், அவருக்கான […]

அசாம் மாநிலம் கோக்ராபர் என்ற பகுதியில் நடந்துள்ளது.அதாவது அந்த பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். காதலர்கள் இருவரையும் கோக்ராபர் காவல் நிலைய காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். மேலும் காதலர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த அவர்கள் அன்றைய தினம் இரவு லாக்கப்பில் அடைத்து வைத்திருந்தனர் அப்போதுதான் 17 வயது சிறுமிக்கு இந்த கொடூர […]

அஸ்ஸாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை இன்று மதியம் 12 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதிநவீன வந்தே பாரத் விரைவு ரயில் இப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும். கவுகாத்தியை நியூ ஜல்பைகுரியுடன் இணைப்பதில், தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும் போது, இந்த ரயில் சுமார் ஒரு மணிநேர பயண நேரத்தை மிச்சப்படுத்தும். வந்தே பாரத் ரயில் இந்தப் பயணத்தை 5 […]

மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டப்பேரவையில் விவாத நேரத்தின் போது நாய்களைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி சிக்கலில் மாட்டியிருக்கிறார் அங்குள்ள எம்.எல்.ஏ. மகாராஷ்டிரா மாநிலத்தின் அசல்பூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஓம் பிரகாஷ் பாபா ராவ். இவர் தொடர்ந்து நான்கு சட்டமன்றத் தேர்தலிலும் அந்தத் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் நேற்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய கருத்து சர்ச்சையாக இருக்கிறது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் […]

எந்த ஒரு ஆசையும் மனிதனுக்கு எல்லை மீறி விட்டால் அந்த ஆசையை அடைவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் மன நிலைக்கு அந்த மனிதன் சென்று விடுவான்.அந்த வகையில், அசாம் மாநிலத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் மாநிலம் ஹவுஹத்தியை சேர்ந்தவர் பந்தனா கலிதா. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் தன்னுடைய கணவர் அமர்ஜோதி மற்றும் மாமியார் சங்கரி உள்ளிட்டோரை காணவில்லை என்று இவர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இது […]

உயர் நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அசாமில் பரபரப்பு ஏற்படுத்தியது. அசாமை சார்ந்த வழக்கறிஞர் மகாஜன். இவர் அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு ஒரு ஜாமீன் மனு விசாரணை தொடர்பாக ஆஜராக வந்திருந்தார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் அதிருப்தி அடைந்த நீதிபதி அங்குள்ள காவலர்களை அழைத்து அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு […]

திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம் என அஸ்ஸாம் முதல்வர் கூறியுள்ளார். அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கூறுகையில், திருமணம் செய்துகொண்டு தாய்மையை தழுவ பெண்கள் அதிக வயது வரை காத்திருக்க வேண்டாம். தாய்மையை வரவேற்பதற்கான “பொருத்தமான வயது” 22 முதல் 30 வயது வரை இருக்கும் என்று கூறினார். பெண்கள் தாயாக மாறுவதற்கு அதிக […]

அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “ அசாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.. குழந்தை […]