திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வன்னாங் கோவில் இன்னும் இடத்தில் தனியார் தார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவதோடு பொதுமக்களுக்கும் அவ்வப்போது உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த தொழிற்சாலையை சுற்றி இருக்கும் கிராம மக்கள் வேறு இடத்திற்கு இந்த தொழிற்சாலையை மாற்றக்கோரி போராடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அந்த தொழிற்சாலையில் இருந்து கடுமையான கரும்புகை வெளியேறியது. இந்தப் புகையின் தாக்கத்தினால் அருகில் இருக்கும் ஊர்களைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 13 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த ஊர் மக்கள் புகையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் பெண்களையும் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தப் புகையினால் ஏற்படும் பாதிப்புகளை அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறிய மக்கள் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Post
அமெரிக்காவில் ஆய்வாளர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது! 5 பேர் மரணம்!
Sat Feb 25 , 2023
You May Like
-
2022-09-11, 6:10 pm
’முதல்வர் எழுதிய புத்தகத்தை படிக்க ஆர்வம் காட்டும் சீமான்’..! ஏன் தெரியுமா?