fbpx

ப்யூன் அண்ணா தானே.. சகஜமாக பேசிய 13 வயது சிறுமி..!! வாயில் துணியை கட்டி.. பதற வைக்கும் சம்பவம்…!!

உத்தர பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் பகுதியில் 13 வயது சிறுமியை பள்ளியில் வேலை செய்யும் ப்யூன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், இந்த குற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ஃபரூக்காபாத் பகுதியில் செயல்பட்டு வரும் கவுன்சில் பள்ளியில் 13 வயது சிறுமி 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் வேலை செய்யும் ப்யூன் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று தன் நண்பர்களுடன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர். சிறுமியின் அலறல் சத்தம் கேட்கவே, வாயில் துணியை கட்டி பாலியல் பலாதாரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியே யாரிடமாவது தெரிவித்தால், கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் உண்மை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பள்ளி ப்யூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த போலீசார், குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும், இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவித்தனர்.

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்சோ மற்றும், கற்பழிப்பு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பங்கஜ், தந்தை இறந்ததும் அவரின் பதவியைப் பெற்று, கவுன்சில் பள்ளியில் பியூனாக பணிபுரிகிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Read more ; மக்களுக்காக காட்டு விலங்குகளைக் கொல்ல நமீபியா திட்டம்!. அதிர்ச்சி காரணம்!.

English Summary

13-Year-Old Pregnant After Rape; School Peon Threatened To Kill Her; Stuffed Cloth In Mouth

Next Post

விமானம் லேட்.. இருக்கை உடைந்திருந்தது..!! இங்க எதுவுமே சரி இல்லை!! - கிரிக்கெட் வீரர் பதிவுக்கு மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா

Sun Sep 1 , 2024
Jonty Rhodes Slams Air India Over Delayed Flight And Broken Seat, Airline Responds

You May Like