fbpx

பகீர்…..! அக்கா தம்பிக்குள் மொபைல் சண்டை! 13 வயது மாணவன் தற்கொலை!

நெல்லை டவுன் பகுதியைச் சார்ந்த 13 வயது மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை டவுன் தைக்கா தெருவை சார்ந்தவர் மைக்கேல் ராஜ் இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல் ராஜ் உயிரிழந்து விட்ட நிலையில் அவரது மனைவி மேரி தனியார் நிறுவனம் ஒன்றில் கஷ்டப்பட்டு வேலை செய்து தனது குழந்தைகளை படிக்க வைத்து வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது வீட்டில் இருந்த சிறுவன் தருண் திடீரென அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இதனையடுத்து அவனை மீட்ட தாய் மேரி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும் அவரது சகோதரிக்கும் செல்போனை யார் பயன்படுத்துவது என்ற பிரச்சனையில் கோபமடைந்த சிறுவன் தருண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. கல்விக்காக மாணவர்களின் கைகளுக்குள் சென்ற செல்போன்கள் அவை இல்லாமல் இன்று அவர்களால் இருக்கவே முடியாது என்ற நிலை உருவாகி இருக்கிறது. இளைய சமூகம் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு விளையாட்டு போன்ற ஆரோக்கியமான விஷயங்களில் ஈடுபட வேண்டும் .

Rupa

Next Post

தமிழகத்தில் பொதுத்தேர்வு..!! ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேர்வுத்துறை முக்கிய உத்தரவு..!!

Fri Mar 10 , 2023
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வு அறைக்கு வரும் மாணவர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தேர்வு அறையில் […]

You May Like