தெலங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை அதிர்ச்சிகரமான திருப்பத்தை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் தற்கொலை என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், சிசிடிவி காட்சிகள், செல்போன் தகவல்கள் உள்ளிட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த போலீசார், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என சந்தேகித்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கோதாவரிகனியில் உள்ள நஸ்பூர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்த விரிவுரையாளராக பணியாற்றி வந்த நவீன் மீது போலீசாரின் சந்தேகம் திரும்பியது. மாணவி […]

ஐஐடி பாம்பே மாணவர் சாஹில் வகோடே உயிரிழந்த சம்பவத்தில், பேராசிரியர் சூர்யநாராயண் துல்லா மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் மேலும் 2 பேர் அடையாளம் குறிப்பிடப்படாத குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 20 வயதான சாஹில் வகோடே, ஐஐடி பாம்பேவின் எரிசக்தி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் இரண்டாம் ஆண்டு எம்எஸ்சி படித்து […]

குழந்தை இல்லாத ஏக்கத்தில் வாழ்க்கையே வெறுமையாகிப் போகிறது என வேதனைப்படும் மனிதர்கள் ஒருபுறம்… தங்களுக்குப் பிறந்த குழந்தைகளையே உறவுச் சிக்கல்களுக்காக கொடூரமாக கொல்லும் சம்பவங்கள் மறுபுறம். ஒரு உயிரைத் தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய வரமாக எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள்; அதே உயிரை எந்தத் தயக்கமும் இல்லாமல் பறிக்கும் கொடூரமும் அரங்கேறுகிறது. அதிர்ச்சியளிக்கும் இந்த முரண்பாட்டுக்கு மத்தியில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. மகிழங்கோட்டை […]

12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவருடன் படித்த 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவியை தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவும், கேலி கிண்டல் செய்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் மாணவியின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளியில் படித்து வந்த அந்த மாணவியை சில சக மாணவர்கள் தொடர்ந்து குறிவைத்து பேசியதாக […]

சென்னையில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அளித்த சித்திரவதை காரணமாக, 27 வயதான தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில், புவனேஸ்வரி என்ற இளம்பெண், தனியார் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024 செப்டம்பர் மாதம் திருமணமான இவருக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது புவனேஸ்வரியின் பெற்றோர் […]

மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு […]

காதல் திருமணம் செய்து ஆறு மாதங்களே ஆன நிலையில், மனைவியுடனான குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் ஒரு இளைஞரின் வாழ்க்கையை சோகத்தில் முடித்துள்ளது. மனைவி மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் மனமுடைந்த 28 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துமகூரு மாவட்டம் குனிகல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மகாவீர் காலனியைச் சேர்ந்தவர் அவினாஷ் (28). ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து […]

விளையாட்டாக ஆரம்பிக்கும் கள்ளக்காதல் விவகாரங்கள் நாளடைவில் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக மாறி, இறுதியில் கொலை, தற்கொலை போன்ற விபரீதங்களிலும் முடிந்து விடுகின்றன. இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பெரும் மனவேதனைக்கு ஆளாகின்றனர். அந்த வகையில், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ரோஸ் காட்டேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (48). இவர் எலக்ட்ரிக்கல் கடை […]

ஊடகவியலாளர் சவுக்கு சங்கரின் ஒரே மகனான 13 வயது தியோ உயிரிழந்துள்ள தகவல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழக அரசியல், நிர்வாகம் மற்றும் ஊழல் தொடர்பான பல்வேறு விசாரணைத் தகவல்கள், சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் விமர்சனங்களின் மூலம் பரவலாக அறியப்பட்ட ஊடகவியலாளரான சவுக்கு சங்கரின் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள இந்த துயரச் சம்பவம், பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், இன்றைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் மனஅழுத்தம், […]

மதிப்பெண்கள் ஒரு குழந்தையின் திறமையை முழுமையாக அளவிட முடியாது. ஆனால் சில பெற்றோர்கள் அதிக மதிப்பெண்களையே வெற்றியின் அடையாளமாக நினைக்கிறார்கள். இதனால் பல குழந்தைகள் சிறு வயதிலேயே மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். பாராட்ட வேண்டிய நேரத்தில் கண்டிப்பும், ஊக்கப்படுத்த வேண்டிய இடத்தில் அழுத்தமும் கொடுக்கப்படும்போது, அதன் விளைவுகள் சில நேரங்களில் மிகவும் வேதனையாக முடிகின்றன. அப்படிப்பட்ட ஒரு சோக சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி […]