fbpx

13080 அணுகுண்டுகள்!. 3ம் உலகப்போருக்கு தயாரான நாடுகள்!.இதுநடந்தால் பேரழிவு ஏற்படும்!. நிபுணர்கள் எச்சரிக்கை!

War: 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி உலக வரலாற்றில் யாரும் மறக்க மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இது மனித நாகரீகத்தின் போர் வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. 2ம் உலகப் போரின்போது ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல் தான்.

அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்பு, கதிர்வீச்சு பாதிப்பு ஆகியவற்றால் அந்த ஆண்டின் இறுதியில் பலி எண்ணிக்கை மட்டும் 1,40,000-ஆக அதிகரித்தது. குறிப்பாக, அந்த அணுகுண்டு தாக்குதலின் கதிர்வீச்சு பாதிப்புக்குள்ளானவர்களின் சந்ததியினர் தலைமுறை தலைமுறையாக உயிரியல் குறைபாட்டுடன் பிறந்தனர். மேலும் அந்த தாக்குதல் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த குண்டுகளின் கொடிய பின்விளைவுகளை இன்னும் உணர முடிகிறது.

இத்தகைய அழிவை ஏற்படுத்திய அமெரிக்காவே போரில் அணுகுண்டைப் பயன்படுத்திய முதலும் , கடைசியுமான நாடு. அமெரிக்காவால், மனித இன வரலாற்றில் நிகழ்ந்த மிக கொடூரமான இந்த சம்பவம், உலகளாவிய ஆயுதக் குறைப்பு மற்றும் அமைதி ஆகிய முயற்சிகளுக்கு வழிவகுத்தது. இதுவே, அணுசக்தி இல்லாத உலகம் என்ற எண்ணத்தை நோக்கி நகரவைத்தது.

இந்தநிலையில், 3ம் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இஸ்ரேலும் – ஈரானும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும், இஸ்ரேலும் ஈரானும் நேரடிப் போரில் ஈடுபடவில்லை. ஆனால் இருவரும் நேரடியாக சண்டையிட்டால் என்ன நடக்கும்? இஸ்ரேலிடம் சுமார் 70 அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய தரவுகளின்படி, தற்போது உலகம் முழுவதும் மொத்தம் 13,080 அணுகுண்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவை 13 ஆயிரம் கிமீ முதல் 15 ஆயிரம் கிமீ தூரம் வரை தாக்கும் சக்திகொண்டவை என்றும் இந்த அணுகுண்டுகளில் பாதி பயன்படுத்தப்பட்டால், உலகம் முழுவதும் அழிந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எந்த நாட்டில் எத்தனை அணுகுண்டுகள் உள்ளன? ரஷ்யா – 6257, அமெரிக்கா – 5550, பிரான்ஸ் – 290, சீனா – 350, இங்கிலாந்து – 225, பாகிஸ்தான் – 165, இந்தியா – 156, வட கொரியா – 50 அணுகுண்டுகளை வைத்துள்ளன. இருப்பினும், 11 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கிமீ வரையிலான தொலைதூரத்தில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் மற்றும் அதிக எண்ணிக்கையிலான அணு ஆயுதங்களை ரஷ்யா கொண்டுள்ளது. அமெரிக்காவால் 9650 கிமீ முதல் 13 ஆயிரம் கிமீ தூரம் வரை அணுகுண்டுகளை ஏவ முடியும்.

பனிப்போர் காலத்திலிருந்து, உலகம் இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. யுனைடெட் கிங்டம், மேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கின் பெரும்பகுதி உட்பட அமெரிக்காவின் தலைமையிலான மேற்கத்திய நாடுகளை ஒரு தொகுதி கொண்டுள்ளது. மற்ற குழுவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த நாடுகள் உள்ளன. இந்த நாடுகளில் ரஷ்யா, சீனா, வட கொரியா, ஈரான் மற்றும் பசிபிக் நாடுகளில் இருந்து சில நாடுகள் அடங்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை, ஏனெனில் போர் ஏற்பட்டால் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மக்களே…! சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்… தமிழக முழுவதும் 19 மாவட்டத்தில் கனமழை…!

English Summary

Iran-Israel war: 13080 nuclear bombs, two nations at war and danger of…., one button can…

Kokila

Next Post

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கான புதிய ஹெல்த் பேக்கேஜ்!. இம்மாத இறுதிக்குள் அமல்!. மத்திய அரசு அதிரடி!

Mon Oct 14 , 2024
New health package for seniors above 70 years!. Implementation by the end of this month! Central government action!

You May Like