நாட்டில் இந்த நிதியாண்டு வரையில், பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், நாட்டில் ரிசர்வ் வங்கி மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகைகள் தொடர்பாக, மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முதல், 2023-24 வரையில், சென்ற 9 வருடங்களில் சுமார் 14.56 லட்சம் கோடி ரூபாய் வாராகடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி வழங்கிய அறிக்கையின் மூலமாக தெரியவந்துள்ளது.
அத்துடன் வாராகடன்களை மீட்டெடுப்பதற்காகவும், அதனை பெரிய அளவில் குறைக்கும் நடவடிக்கையிலும், மத்திய ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது எனவும், இந்த நடவடிக்கைகள் காரணமாக, சென்ற 2018 ஆம் வருடத்தில் இருந்து, தற்போதைய நிலவரம் 4.28 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது.
அதோடு, தனியார் துறை வங்கிகளின் நிகர தள்ளுபடி கடன்கள் 73,803 கோடி ரூபாயாக இருக்கிறது. தற்சமயம் பண அதிகார வரம்பு 20 லட்சமாக உயர்த்தப்பட்டிருப்பதால், வாரா கடன்கள் அதிக அளவு திரும்ப கிடைத்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.