கார்பரேட் நிறுவனங்களின் தரகராக செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நீரா ராடியா மீது எந்த குற்ற முகாந்திரம் இல்லாத காரணத்தால் 14 வழக்குகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது தொழிலதிபர்கள் சார்பில் பெரு நிறுவனங்களின் தரகராக நீராராடியா செயல்பட்டதாக புகார் கூறப்பட்ட நிலையில் , இவர் மீது 2 ஜி ஊழல் வழக்கு உள்பட 14 வழக்குகள் பதிவு செய்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வந்தது. இதற்கு ஆதாரமாக இவரது தொலைபேசி பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பித்தது சி.பி.ஐ. .
மேலும் எம்.பி. கனிமொழி , ஆ.ராசாவுக்கும் இவர் உடந்தையாக இருந்ததாகவும் பரபரப்பான தொலைபேசி பதிவுகள் சிக்கியுள்ளதாகவும் வழக்கின் ஆரம்பக்காலத்தில் பரபரப்பாக கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்குகள் நடைபெற்று வருகின்றது. கிட்டத்தட்ட 8000 தொலைபேசி உரையாடல்களை சி.பி.ஐ. ஆய்வு செய்துள்ளது. இந்நிலையில் உரையாடல்களில் எந்த முகாந்திரமும் இல்லை என சிபிஐ வழக்குகளை ரத்து செய்வதாக கூறியதை அடுத்து 14 வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்தது.
நீராராடியாவின் தொலைபேசி பதிவுகளில் ஆய்வு செய்ததில் அவர் எந்த விதமான குற்ற நடவடிக்கைகளும் நடந்ததற்கான பேச்சுக்கள் இடம் பெறவில்லை என நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்தது. இதனால் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.