நட்சத்திர விடுதியில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..! எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை..!

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

கடந்த 11ஆம் தேதி வெடித்த மோதல் காரணமாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் எல்.எல்.ஏக்கள் கூட்டத்தை நடத்த ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இடப்பற்றாக்குறை ஏற்படும் என்பதால், நட்சத்திர விடுதியில் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நட்சத்திர விடுதியில் இன்று அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்..! எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை..!

அதன்படி, இன்று மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்எல்ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்எல்ஏ-க்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். அதிமுக-வின் ஆதரவை பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு ஏற்கனவே நேரில் சந்தித்து கேட்டிருந்த நிலையில், அது தொடர்பாக விவாதிக்க இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் கூட உள்ளதாக தெரிகிறது.

Chella

Next Post

42-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை..! 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

Sun Jul 17 , 2022
சேலம் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை, 42-வது முறையாக எட்டி சாதனை படைத்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே வந்தது. அந்த அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இதனால், அணைகளின் பாதுகாபு கருதி கடந்த 8ஆம் தேதி முதல் கபினி, கிருஷ்ணராஜ […]
மேட்டூர் அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

You May Like