fbpx

ஆபத்தான 14 செயலிகள்.. உங்க ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனே டெலிட் பண்ணுங்க…

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நாம் பெரும்பாலும் பல தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்களை அதிகமாக பயன்படுத்துகிறோம்.. அத்தகைய சூழ்நிலையில், அனைவரின் தொலைபேசிகளிலும் பல செயலிகள் இருக்கும். அதிகாரப்பூர்வ தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் மூலம் ஹேக்கர்கள் தகவல்களை திருடுகின்றனர்.

அதாவது, ஹேக்கர்கள் ஸ்மார்ட்போன் பயன்பாடுகளை ஹேக்கிங்கிற்கான வழிமுறையாக மாற்றி, பின்னர் மக்களின் விவரங்களை எளிதாக அணுகுகிறார்கள். அந்த வகையில் சில ஆபத்தான ஸ்மார்ட்போன் செயலிகள் உள்ளதாக தகவல் வெளியாகிறது.. அவற்றை நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடாது, அவற்றை நீங்கள் பதிவிறக்கியிருந்தால், அவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

உங்கள் தகவலுக்கு, ஆயிரக்கணக்கான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ள ஆபத்தான ஆண்ட்ராய்டு மால்வேர் அச்சுறுத்தல் பரவியுள்ளது. இந்த ஆபத்தின் காரணமாக, பல கூகுள் ப்ளே ஸ்டோர் செயலிகள் அபாயகரமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அவற்றைப் பதிவிறக்குவது பயனர்களின் வங்கிக் கணக்கையும் காலி செய்துவிடும்.

ஆபத்தான 14 செயலிகள்

  • Junk Cleaner
  • EasyCleaner
  • Power Doctor
  • Super Clean
  • Full Cleaner
  • Clean Cache
  • Fingertip Cleaner
  • Quick Cleaner
  • Keep Clean
  • Windy Clean
  • Carpet Clean
  • Cool Clean
  • Strong Clean
  • Meteor Clean

எனவே யாரேனும் இந்த செயலிகளில் ஏதேனும் ஒன்றை இன்ஸ்டால் செய்திருந்தால், அவற்றை உடனடியாக டெலிட் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், செயலியை அன் இண்ட்ஸ்டால் செய்த பிறகு, உங்கள் சமூக ஊடக கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது… இதன் மூலம் பாதுகாப்பாக இருக்க முடியும்..

Maha

Next Post

சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்..! மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

Wed Aug 3 , 2022
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாகவும், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படியும், கர்நாடகா உள்ளிட்ட மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டை வெகு விமரிசையாக கொண்டாடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள், சமீப காலமாக கர்நாடகாவில் அடிக்கடி கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதை […]
சுதந்திர தின விழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதித் திட்டம்..! மாநில அரசுகளுக்கு மத்திய உளவுத்துறை எச்சரிக்கை..!

You May Like