fbpx

1,400 பேர் லிஸ்ட் ரெடி..!! ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் எடுத்த முடிவு..!! ஊழியர்கள் அதிர்ச்சி..!!

‘ஸ்பைஸ்ஜெட்’ விமான நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் தற்போதைய நிலவரப்படி சுமார் 9,000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சுமார் 30 விமானங்கள் இயக்கத்தில் உள்ளன. இந்நிலையில், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அதன் மொத்த பணியாளர்களில் சுமார் 15 சதவீதமாகும். இந்த நடவடிக்கையானது செயல்பாட்டு செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வத்தை தக்க வைத்துக்கொள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இது செயல்பாட்டு தேவைகளுக்கு மாறாக நிறுவன அளவிலான செலவுகளின் சீரமைப்பை உறுதி செய்வதாகும். பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் பணியாளர்களுக்கு வழங்கும் பணி துவங்கப்பட்டுவிட்டது” என்றார். இந்நிறுவனம் பல மாதங்களாக தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை தாமதமாக வழங்கி வருகிறது. பல ஊழியர்களுக்கு இன்னும் ஜனவரி மாத ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், ரூ.2,200 கோடி நிதி திரட்டுவதற்கான செயல்பாட்டில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

"மரபு தெரியாத ஆளுநர்.. ஜனநாயகத்தை மீறாத முதல்வர்" - ஆளுநர் வெளிநடப்பு குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்.!

Mon Feb 12 , 2024
தமிழக சட்டப்பேரவையில் இந்த வருடத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்த சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிகவும் பரபரப்பானது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக அரசு தயாரித்த உரையை நிராகரித்து வெளிநடப்பு செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை முன் வைத்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று கூடிய நிலையில் […]

You May Like