fbpx

இதுதான் கடைசி வார்னிங்.. புல்டோசர் நடவடிக்கை எடுக்க அரசுக்கு அதிகாரம் கிடையாது..!! – லெப்ட் ரைட் வாங்கிய உச்ச நீதிமன்றம்

சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்டவிதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது என்று ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அதிகளவு புல்டோசர் கலாச்சாரம் நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசம், குஜராத், அசாம், ராஜஸ்தான் போன்ற பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டவிரோத ஆக்கிரமிப்பு வீடுகளை உடனுக்குடன் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது. முக்கியமாக, இந்த புல்டோசர் கலாச்சார நடவடிக்கை சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது தான் அதிகளவில் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இது தொடர்பான பல்வேறு வழக்குகள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டவர்களின் கட்டிடங்கள் உள்பட எந்த கட்டிடத்தையும் நீதிமன்றத்தின் அனுமதி இன்றி இடிக்கக்கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. மேலும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் தெரிவித்திருந்தது. இருந்த போதும், சில அதிகாரிகள் கட்டிடங்களை இடிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. ‘புல்டோசர்’ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “சொத்து உரிமையாளருக்கு 15 நாட்களுக்கு முன் அறிவிப்பு வழங்காமல், சட்ட விதிகளை பின்பற்றாமல் கட்டிடங்களை இடிக்கக் கூடாது. பதிவு செய்யப்பட்ட தபால் மூலம், உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். அதில், அங்கீகரிக்கப்படாத கட்டுமானத்தின் தன்மை, விதிமீறலின் விவரங்கள் மற்றும் இடிப்புக்கான காரணங்கள் குறிப்பிடப்பட வேண்டும். கட்டிடம் இடிக்கப்படும்போது வீடியோ எடுக்கப்பட வேண்டும். வழிகாட்டுதல்கள் மீறப்படுமானால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும்.

சட்டத்தின் ஆட்சியும், குடிமக்களுக்கான உரிமைகளும் நிர்வாகத்தின் தன்னிச்சையான நடவடிக்கைகளுக்கு எதிரானது. அத்தகைய நடவடிக்கைகளை சட்டம் மன்னிக்காது. சட்ட மீறல்கள் சட்டவிரோதத்தை ஊக்குவிக்கும். அரசியலமைப்பு ஜனநாயகத்தைப் பாதுகாக்க சிவில் உரிமைகளைப் பாதுகாப்பது அவசியம். ஒரு நிர்வாகி ஒரு நீதிபதியைப் போல் செயல்பட்டு, சட்டத்தின் செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு வீட்டை இடிக்க உத்தரவிட்டால் அது சட்டத்தின் விதியை மீறுவதாகும். குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது குற்றவாளிக்கு எதிராக அரசு தன்னிச்சையாக நடவடிக்கை எடுக்க முடியாது. சில ஆக்கிரமிப்புகள் இருந்தாலும், இடிப்பது மட்டுமே அதற்கு ஒரே தீர்வு என்பதற்கான ஆதாரங்களை அதிகாரிகள் காட்ட வேண்டும்” என தெரிவித்தனர்.

வீடு என்பது ஒவ்வொருவருக்கும் கனவு ஆகும். அத்தகையை கனவு கலைந்து போய்விடக் கூடாது. வீடுகளை இடித்து அந்த பெண்கள், குழந்தைகள் சாலைகளில் இருப்பது சரியானது அல்ல.  சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் இருக்கும் சட்டத்தைக் கொண்டு மக்களை காக்க வேண்டும். வீட்டை இடிக்கும் வழங்கும் நோட்டீஸை எதிர்த்து வழக்கு தொடர கால அவகாசம் வழங்க வேண்டும். நீர்நிலைகள் போன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது” எனத் தெரிவித்தனர். 

Read more ; ஜம்மு காஷ்மீரை அலற வைத்த நில அதிர்வு.. ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவு..!!

Next Post

இன்று இரவு முதல் மீண்டும் ஆரம்பம்..!! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அலர்ட்..!! பிரதீப் ஜான் பரபரப்பு தகவல்..!!

Wed Nov 13 , 2024
According to private meteorologist Pradeep John, rains will start from tonight in its suburban districts including Chennai.

You May Like