fbpx

ராஜஸ்தான் : மின் தூக்கி செயலிழந்து தாமிர சுரங்கத்திற்குள் சிக்கிக்கொண்ட 15 பேர் மீட்பு.. ஒருவர் பலி!

ராஜஸ்தான் மாநிலத்தில் மின் தூக்கி செயலிழந்து சுரங்கத்திற்குள் சிக்கிய 14 பேர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் நீம் கா தானா மாவட்டம் ஜெய்ப்பூரில் இருந்து 108 கிமீ தொலைவில் உள்ளது. இம்மாவட்டத்தின் கெத்ரி பகுதியில் உள்ள தாமிரச் சுரங்கம் 1967ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கொல்கத்தாவிலிருந்து வந்த லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள், சுரங்க அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் நேற்று இரவு இச்சுரங்கத்திற்கு சென்றுள்ளனர்.

அரசு நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களுடன் விஜிலென்ஸ் குழுவினர் 15 பேர் ஆய்வுக்காக சுரங்கத்திற்குள் சென்றுள்ளனர். ஆனால், அவர்கள் மேலே வர முற்பட்டபோது, ​​கூண்டு வைத்திருந்த கயிறு அறுந்து விழுந்து, பல நூறு அடி ஆழத்தில் பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

மாநில பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்த நிலையில், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அனைவருக்கும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெய்ப்பூரிலுள்ள மணிபால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Post

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!! மாவட்ட ஆட்சியர்களுக்கு வார்னிங்..!!

Wed May 15 , 2024
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்று தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்திருக்கிறது. மழையின் அளவு போதுமானதாக இல்லை என்றாலும் கூட, கோடை வெயில் குறையும் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. மே மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் தலையை […]

You May Like