ராஜஸ்தான் | அனுமன் ஜெயந்தி விழாவின் போது பயங்கரம் ; முன்விரோதம் காரணமாக தலையில் கோடரியால் தாக்கிய நபரின் அதிர்ச்சி வீடியோ..

’என் பொண்ணு மேலயா கை வைக்கிற’..!! புது மாப்பிள்ளையை துடிதுடிக்க கொன்ற மாமனார்..!! கடலூரில் அதிர்ச்சி..!!

ராஜஸ்தான் மாநிலம் பூண்டியில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) இரவு நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது, ​​தனிநபர் விரோதம் காரணமாக, ஒருவர் மற்றொருவரை கோடரியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. வீடியோவில், ஒரு பெண் அமர்ந்திருக்கும் ஆண்களுக்கு இடையில் நடனமாடுகிறார். அப்போது திடீரென திரைக்குப் பின்னால் இருந்து வந்த நபர் கோடாரியை எடுத்துக்கொண்டு ஒருவரின் தலையில் பலமாக தாக்கினார். இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது, மக்கள் பீதியில் சிதறி ஓடினர். அதனை தொடர்ந்து குற்றவாளி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். காயமடைந்தவர் கோட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே கிராமத்தில் வசிக்கும் தேஜ்மல் குர்ஜார் என்பவர் முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் சகோதரர் ரஞ்சித் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ரஞ்சித் கூறியதாவது, “ஜூன் 18, 2023 அன்று, தேஜ்மலும் அவரது குடும்பத்தினரும் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​அவர்களின் டிராக்டர் கோளாறு காரணமாக கவிழ்ந்தது. இந்த சம்பவத்தின் போது, ​​தேஜ்மாலின் மனைவி சஞ்சு மற்றும் கோபாரி லால் ஆகியோர் உயிரிழந்தனர். இது ஒரு விபத்து என்று தேஜ்மல் கூறிய நிலையில், அவர் வெறுப்பு அடைந்து, பின்னர் வன்முறை தாக்குதலை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருவதுடன், குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1783059719231578370

Next Post

Indonesia | உதயமாகும் புதிய சகாப்தம்.!! இந்தோனேசியா அதிபராக அறிவிக்கப்பட்ட பிரபோவோ சுபியாண்டோ.!!

Wed Apr 24 , 2024
Indonesia: இந்தோனேசியாவின் பொதுத் தேர்தல் ஆணையம் பிரபோவோ சுபியாண்டோவை நாட்டின் 8-வது ஜனாதிபதியாக இன்று அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சையில் தோல்வியடைந்த இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களது மேல்முறையீட்டு மனு அரசியலமைப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து பிரபோவோ சுபியாண்டோ புதிய அதிபராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 2024 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவின்(Indonesia) ஜனாதிபதியாக பிரபோவோவும் […]

You May Like