fbpx

மத்திய அரசு அசத்தல் அறிவிப்பு…! எரிவாயு திட்டங்களை ஊக்குவிக்க 15% மானியம் வழங்கப்படும்…! முழு விவரம்

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி எரிவாயுவாக்கும் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான திட்டத்திற்கு ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் மூன்று பிரிவுகளின் கீழ் ஊக்கத்தொகை அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி திட்டத்திற்கு அமைச்சரவை பின்வருமாறு ஒப்புதல் அளித்துள்ளது.

முதல் பிரிவு

நிலக்கரியை வாயுவாக்கும் திட்டங்களுக்கு மூன்று வகைகளின் கீழ் மொத்தம் ரூ.8,500 கோடி நிதியுதவி வழங்கப்படும்.முதல் பிரிவில், அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு ரூ. 4,050 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3 திட்டங்களுக்கு ஒட்டு மொத்த மானியமாக ரூ. 1,350 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படும்.

இரண்டாம் வகைப் பிரிவு

அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் துறை நிறுவனங்களுக்கு ரூ.3,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒட்டுமொத்தமாக ரூ.1,000 கோடி அல்லது மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். குறைந்தபட்சம் ஒரு திட்டமாவது கட்டண அடிப்படையிலான ஏல செயல்முறையில் ஏலம் விடப்படும், மேலும் அதன் அளவுகோல்கள் நிதித் ஆயோக்குடன் கலந்தாலோசித்து வடிவமைக்கப்படும்.

மூன்றாவது வகைப் பிரிவு

செயல்விளக்கத் திட்டங்கள் (உள்நாட்டு தொழில்நுட்பம்) அல்லது சிறிய அளவிலான உற்பத்தி அடிப்படையிலான எரிவாயுவாக்கும் ஆலைகளுக்கு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் குறைந்தபட்சம் ரூ.100 கோடி மூலதன செலவு, மூலதனத்தில் 15 சதவீதம், இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

Vignesh

Next Post

TnGovt: புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி...! வரும் 7-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்...!

Thu Jan 25 , 2024
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதியின் 6-வது பதிப்பிற்கான விண்ணப்பங்களை பெறத் தொடங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;தமிழ்நாடு அரசின் டான்சீட் (TANSEED) திட்டமானது, தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவும் விதமாக தொடங்கப்பட்டு இதுவரை நான்கு பதிப்புகள் நடைபெற்றுள்ளது. தற்போது 6 -ஆம் பதிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டான்சீட் திட்டம் 2021 ம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து […]

You May Like