fbpx

தமிழகத்தை உலுக்கிய கொடூரம்: 15 வயது சிறுமி; 5 பேர்‌ கூட்டு பாலியல் வன்புணர்வு.! 2 பேர் கைது 3 பேர் தப்பி ஓட்டம்.!

சிவகங்கை மாவட்டத்தில் 15 வயது சிறுமி 5 நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்பி ஓடிய மூன்று பேரை காவல்துறை தேடி வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பெற்றோர்கள் வேலைக்கு சென்றதால் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து அவர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர் .

இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரிஷாந்த் மற்றும் சூர்யா என்ற இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மூன்று இளைஞர்களையும் காவல்துறை தேடி வருகிறது. கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் .

அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்புணர்விற்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் கருதப்பட்ட நிலையில் இது போன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

வெள்ள பாதிப்பு..!! உணவின்றி தவிக்கும் மக்கள்..!! களத்தில் இறங்கிய விஜய் மக்கள் இயக்கம்..!!

Wed Dec 6 , 2023
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெரும்பாலான ஆறுகள் நிரம்பி விட்டதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வீடுகளுக்குள் […]

You May Like