fbpx

சிவகங்கை: “என்னடா கட்டிங் இது”.! 15 வயது சிறுவனின் உயிரை பறித்த ‘பாக்ஸ் கட்டிங்’.! தந்தை திட்டியதால் விபரீத முடிவு.!

சிவகங்கை மாவட்டத்தில் முடி வெட்டியதற்கு தந்தை கண்டனம் தெரிவித்ததால் 15 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 15 வயது மாணவன் பாக்ஸ் கட்டிங் ஸ்டைலில் முடி வெட்டி இருக்கிறான். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது தந்தை மகனை திட்டியதோடு நன்றாக முடியை குறைத்து வெட்ட வைத்திருக்கிறார். இதனால் சிறுவன் மன உளைச்சலில் இருந்திருக்கிறான்.

இதனைத் தொடர்ந்து சிறுவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முடி வெட்டும் தகராறில் சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’சங்கி’ என்பதற்கு இதுதான் அர்த்தம்..!! புது விளக்கம் கொடுத்த வானதி சீனிவாசன்..!!

Mon Jan 29 , 2024
‘சங்கி’ என்பதற்கு என்ன அர்த்தம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் புது விளக்கம் அளித்திருக்கிறார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தனது குடும்பத்துடன் சென்றார் ரஜினிகாந்த். இதனால் ரஜினிகாந்தை சங்கி என்று விமர்சித்து மீம்ஸ்களும், ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனது தந்தை சங்கி இல்லை என்றும், அவரை சங்கி என்று பலர் கூறுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்திருந்தார். […]

You May Like