பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,500 ரொக்க பணம் உயர்த்தி வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்புக்களை குறைத்து பணம் உயர்த்தி வழங்கலாமா என்பது குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கபட்ட வெல்லம் உள்ளிட்ட சில பொருட்கள் பயன்படுத்தபடாத முறையில் இருந்ததாக எதிர் கட்சியினர் குற்றச்சாட்டு கூறியிருந்த நிலையில், இந்த ஆண்டு அதை தவிர்ப்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு 21 பொருட்கள் வழங்கபட்டன. ஆனால், இந்தாண்டு அரிசி கரும்பு உள்ளிட்ட சில பொருட்கள் மட்டும் மக்களுக்கு வழங்கிவிட்டு ரூ.1,500 ரூபாய் ரொக்க பணமாக கொடுத்து விடலாமென அலோசிக்கபட்டதாக சொல்லப்படுகிறது இதற்கான அறிவிப்பு போர் இரு நாட்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.