fbpx

செம அறிவிப்பு…! தமிழக அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.15,000 மானியம்…! எப்படி பெறுவது…?

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின்‌ மோட்டார்களுக்குப்‌ பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்கள்‌ வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ 230 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம்‌ வீதம்‌ ரூ.34.50 இலட்சத்திற்கு மானியம்‌ வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்‌ இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள்‌ பழைய திறனற்ற மின்மோட்டார்‌ பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்‌, புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து 10 குதிரை திறன்‌ வரை புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள்‌ பட்டா, சிட்டா, அடங்கல்‌, நில வரைபடம்‌, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலகங்களை அணுகலாம்‌ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

உண்மையிலேயே ஆவலுடன் காத்திருக்கிறேன்!... தங்கம் வென்று, நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு!... ருதுராஜ் நெகிழ்ச்சி!

Sun Jul 16 , 2023
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, மேடையில் நின்று நாட்டுக்காக தேசிய கீதம் பாடுவதே எனது கனவு எனவும் நெகிழ்ச்சியுடன் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், கிரிக்கெட் உள்ளிட்ட மொத்தம் 40 வகையான விளையாட்டுகள் இடம்பெற்றுள்ளது. இந்த முறை ஆசிய விளையாட்டு போட்டிக்கு ஆண், […]

You May Like