fbpx

Aadhaar எண் சரிபார்ப்பு… ஜூலை மாதம் இறுதி வரை…! ஆதார் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்…!

இந்தியா முழுவதும் ஆதார் பதிவு, பயன்பாடு போன்ற செயல்பாடுகள் சிறப்பாக முன்னேறி வருகிறது, ஜூலை 2022 இறுதியில், 134.11 கோடிக்கும் அதிகமான ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்தியாவின் தனிப்பட்ட அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் 1.47 கோடி ஆதாரில் பல்வேறு தகவல்கள் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பொதுமக்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இதுவரை 63.55 கோடி ஆதார் எண்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த புதுப்பிப்புப் பணிகள் பயோமெட்ரிக் அடிப்படையில் ஆதார் மையங்களிலும், ஆன்லைன் ஆதார் தளத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஜூலை மாதத்தில், ஆதார் மூலம் 152.5 கோடி அங்கீகார பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மாதாந்திர பரிவர்த்தனை எண்களில் பெரும்பாலானவை கைரேகை பயோமெட்ரிக் மற்றும் தனிநபர் அடையாளங்களைப் பயன்படுத்தி செய்யப்பட்டன. ஜூலை 2022 வரை 152.5 கோடி ஆதார் எண் சரிபார்க்கப்பட்டுள்ளது. புதிதாக 53 லட்சம் ஆதார் எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் 18 வயதுக்கு குறைவானவர்கள் அதிகம் என‌ மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களுக்கு அஞ்சல் துறையில் வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும்…!

Sun Sep 4 , 2022
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் […]

You May Like