fbpx

15-ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு…! அறைக்குள் காலை 8.45 மணிக்குள் இருக்க வேண்டும்…!

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற உள்ள நிலையில் முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பில்; 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ள “தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கான தேர்வு மையங்களின் பட்டியல் ஏற்கனவே தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்காண் தேர்வு நடத்துவது குறித்து கீழ்க்காண் அறிவுரைகளை அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கடைபிடிக்க உரிய அறிவுரைகளை வழங்கிட வேண்டும்.

தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப்பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாட்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும். தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளராக நியமித்தல் கூடாது.

ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, எக்காரணம் கொண்டும் 20மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. வினாத்தாள் கட்டுக்களை தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம் வினாத்தாள் கட்டுககாப்பு மையத்திலிருந்து வழித்தட அலுவலர்கள் பெற்று சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் / துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். வழித்தட அலுவலர்கள் முதலில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று வினாத்தாள் கட்டுகளை பெற்று காலை 8.45 மணிக்குள் தேர்வு மையத்திற்கு சென்றடைய அறிவுறுத்த வேண்டும்.

நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ. அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித்தலைமையாசிரியர் / முதல்வர் முத்திரையுடன் சான்றொப்பம் பெற வேண்டும். தேர்வு நாளன்று வழங்கப்படும் OMR Sheet லும் புகைப்படம் மாறி / இல்லாமல் இருந்தால், பெயர் பட்டியலில் ( NR) மட்டுமே உரிய புகைப்படத்தினை பசையினால் ஒட்டி (நுழைவுச்சீட்டுடன் ஒப்பிட்டு) தேர்வர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என முதன்மைக் கண்காணிப்பாளருக்கு அறிவுரை வழங்க வேண்டும். OMR Sheet-ல் புகைப்படம் ஒட்டக் கூடாது.

Vignesh

Next Post

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்..!! உலகளவில் தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி தாக்குதல்..!! 2,000-ஐ நெருங்கிய பலி..!!

Wed Oct 11 , 2023
பாலஸ்தீனின் காசா நகர் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலால், அந்த நகரமே தரை மட்டமாகியுள்ளதுடன், பலி எண்ணிக்கை 2000-ஐ நெருங்கியுள்ளது. ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு, பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்த நாடு இஸ்ரேல். தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை பாலஸ்தீன் பூர்வ குடிகள் விரும்பவில்லை. இதனால், பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் […]

You May Like