தென்காசி என்றாலே பெரும்பாலோருக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் குற்றாலம் தான். ஆனால் தென்காசி என்பது குற்றாலத்துடன் மட்டுமல்லாமல், அருவிகள், அணைகள், கோயில்கள், பசுமை மலைகள் என இயற்கைச் சிறப்புகளால் நிரம்பிய பகுதி. அந்தவகையில், தென்காசியின் ஆன்மிகச் சிறப்பையும் இயற்கை எழிலையும் ஒரே இடத்தில் தரும் திருமலை முருகன் கோவில் ஒரு அபூர்வமான தலம்.
முன்னொரு காலத்தில், இக்கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் அதனை வழிபடுவார். ஒரு நாள் அவர் தூங்கிக் கொண்டிருக்கையில், கனவில் முருகப்பெருமான் தோன்றி, “இந்த மலை எனது தலம். அருகிலுள்ள கோட்டைத்திரடு பகுதியில் மணலில் சிலை வடிவில் புதைந்து கிடக்கிறேன். அதை எடுத்து வந்து இம்மலையில் பிரதிஷ்டை செய்யுங்கள்,” என சொல்கிறார்.
பூவன்பட்டரும், பந்தள மன்னர்களும், அந்த இடத்துக்கு சென்று சிலையை கண்டெடுத்து, புளியமரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர். பிற்காலத்தில் மலை மீது கோவில் கட்டி, படிகள் அமைக்கப்பட்டன. மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில் 16 படிகள் ஏறிச் சென்று வணங்கும் சன்னதியில் உச்சி பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த பதினாறு படிகளை ஏறிச் சென்று உச்சி பிள்ளையாரை வழிபட்டால் பதினாறு பேறுகளும் கிட்டும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
திருமலை முருகன் கோவில் என்பது ஆன்மிகப் பேரழகும், இயற்கைச் சிறப்பும் ஒரே இடத்தில் கூடிய ஒரு விசேஷமான தலம். தங்கள் மனதுக்கே நிம்மதி தேடும் ஒருவர், இந்த கோவிலை தவறாமல் பார்வையிட வேண்டும்!
Read more: இரவில் இந்த ஒரு பொருளை முகத்தில் தடவுங்க.. 30 வயதிற்கு பிறகும் முகம் ஜொலிக்கும்..!!