fbpx

காதல் விவகாரத்தில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை..!! தலையில் கல்லைப்போட்டு நசுக்கிய கொடூரம்..!!

டெல்லியில் 16 வயது சிறுமியை கத்தியால் குத்தி கொன்றவரை பிடிக்க காவல்துறை 6 தனிப்படைகள் அமைத்துள்ளது.

டெல்லி மாநிலம் ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கத்தியால் குத்தி கொலை செய்ததோடு, கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலையாளி சிறுமியை கொடூரமாக பலமுறை குத்திய வீடியோவும் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஆத்திரத்தில் சிறுமியை பலமுறை கத்தியால் குத்துகிறார். இறுதியில் பெரிய கல்லை எடுத்து சிறுமி மேலே போடுகிறார். இதனை சுற்றியுள்ள மக்கள் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். யாரும் தடுக்கவில்லை. இந்நிலையில், வடக்கு டெல்லி கூடுதல் டிஜிபி ராஜா பந்தியா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு (சாஹில்) 20 வயது. குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அவரது பெற்றோர் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, டிசிடபிள்யூ தலைவர் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ”16 வயது சிறுமி 40-50 முறை கத்தியால் குத்தப்பட்டு, பலமுறை கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இவை அனைத்தும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. பலர் இதைப் பார்த்தார்கள். ஆனால் செவிசாய்க்கவில்லை. டெல்லி பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் பாதுகாப்பற்றதாக மாறியுள்ளது. யூனியன் ஹெச்எம், டெல்லி எல்ஜி, டிசிடபிள்யூ தலைவர் மற்றும் டெல்லி முதல்வர் ஆகியோருடன் உயர்மட்டக் கூட்டத்தை அழைக்குமாறு மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Chella

Next Post

மக்களே..!! ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய நடைமுறைகள்..!! என்னென்ன தெரியுமா..?

Mon May 29 , 2023
மே மாதம் முடியப் போகிறது. இன்னும் 2 நாட்களில் ஜூன் மாதம் தொடங்க உள்ளது. ஒவ்வொரு புதிய மாதத்தின் தொடக்கத்திலும் சில புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். அத்தகைய சூழ்நிலையில், ஜூன் மாதத்திலும் இதுபோன்ற சில மாற்றங்கள் நடக்கவுள்ளன. இது நமது பாக்கெட் மற்றும் மாதாந்திர பட்ஜெட்டில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். 19 […]

You May Like