காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னைக்கு கிழக்கே 160.கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல தென் தமிழ்நாடு பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.