fbpx

ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கி.மீ பயணம்.. புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகம்.. விலை எவ்வளவு..?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் பலரும் எலக்ட்ரிக் வாகனம் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது.. மேலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கி முன்னணி நிறுவனங்கள் வரை பல ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார், பைக்குக்ளை அறிமுகம் செய்து வருகின்றன..

அந்த வகையில் ஒகாயா, நிறுவனம், தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நிறுவனம் அதன் டீசரை வெளியிட்டது.. இந்நிலையில் அதன் வரம்பு மற்றும் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.. ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.99,999 என்ற விலைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது..

ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 இ-ஸ்கூட்டரில் 3.5கிலோவாட் லி-அயன் எல்எஃப்பி பேட்டரி இரட்டை பேட்டரி இருப்பதாக கூறப்படுகிறது.. 2500W உச்ச சக்தியை உருவாக்கும் திறன் கொண்டதாக இருக்கும். பேட்டரி பேக் மாறக்கூடிய தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கும்.. இந்த ஸ்கூட்டர் ஒரு சார்ஜில் 130 முதல் 160 கிமீ வரை செல்லும். 5 முதல் 6 மணி நேரத்தில் இந்த ஸ்கூட்டர் முழுமையாக சார்ஜ் செய்யப்படும் ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கப்படும். மேலும், இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 60 முதல் 70 கி.மீ. ஆகும்..

மேலும், 12-இன்ச் டியூப்லெஸ் டயர்கள், (tubeless tyres) முன் மற்றும் பின்புற டிரம் பிரேக்குகள் (front and rear drum brakes), முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் அமைப்பு (Telescopic setup) மற்றும் பின்புறத்தில் ஸ்பிரிங் லோடட் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்கள் (spring loaded hydraulic shock absorbers) மற்றும் டிஆர்எல்களுடன் கூடிய எல்இடி ஹெட் மற்றும் டெயில் லேம்ப்கள், (LED head and tail lamps with DRLs), டிஜிட்டல் க்ளஸ்டர் (digital cluster) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-ஸ்கூட்டரில் ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ஆகிய மூன்று டிரைவிங் மோடுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது..

Maha

Next Post

அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்காத நபர்கள் எத்தனை பேர்...? அரசு அதிர்ச்சி தகவல்..

Thu Feb 9 , 2023
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 58 ஆயிரத்து 698 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது. வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் அரசு ஒருவரை நியமனம் செய்கிறது. இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலைவாய்ப்பு இல்லாமல் இருபவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அவருடைய கல்வி மற்றும் இதர தகுதிகள் பதிவு செய்து வைக்கப்படுகின்றன. மாவட்ட அரசுப் […]

You May Like