fbpx

16-வது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான கருத்துக்கள் வரவேற்பு…!

பதினாறாவது நிதிக்குழு அதன் விதிமுறைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்.

பதினாறாவது நிதி ஆணையம் விதிமுறைகள், பின்பற்றக்கூடிய பொதுவான அணுகுமுறை குறித்து பொதுமக்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பரிந்துரைகள் / கருத்துக்களை வரவேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பதினாறாவது நிதிக்குழுவின் பணி தொடர்பான வேறு எந்த விவகாரம் குறித்தும் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

தங்களது ஆலோசனைகளை 16-வது நிதிக்குழுவின் https://fincomindia.nic.in/portal/feedback இணையதளம் மூலம் ‘ஆலோசனைகளுக்கான அழைப்பு’ என்ற பிரிவின் கீழ் சமர்ப்பிக்கலாம். 16-வது நிதிக்குழு இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி டாக்டர் அரவிந்த் பனகாரியாவைத் தலைவராகக் கொண்டு குடியரசுத் தலைவரால் 2023 டிசம்பர் 31 அன்று அமைக்கப்பட்டது. 2026 ஏப்ரல் 01-ம் தேதி தொடங்கி ஐந்து வருட காலப்பகுதியை உள்ளடக்கிய பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்று பதினாறாவது நிதிக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Vignesh

Next Post

இந்த அளவுக்கு கோபமா?… இந்தியாவிடம் கெஞ்சும் மாலத்தீவு அமைச்சர்!

Thu May 9 , 2024
Maldiv: மாலத்தீவு பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்து வருகிறது. எனவே, இந்தியர்கள் எங்கள் நாட்டிற்கு வர வேண்டும் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்திய மக்கள் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அதிபரின் பிடிவாதமும், அமைச்சர்களின் சர்ச்சை பேச்சுகளுக்கு மத்தியில் சமீபக்காலமாக இந்திய மக்கள் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்ல புறக்கணித்து வருகின்றனர். மாலத்தீவில் அதிபர் ஆட்சியே நடைமுறையில் இருந்து வரும் நிலையில், சென்ற ஆண்டு நடந்த […]

You May Like